Published : 01 May 2014 07:55 AM
Last Updated : 01 May 2014 07:55 AM

மோடி வரம்பு மீறவில்லை: பாஜக

காந்திநகரில் வாக்களித்தபிறகு மோடி வரம்பு மீறிய வகையில் எதையும் செய்யவில்லை என்றும். காங்கிஸ் கட்சிதான் இதை பெரி தாக்கிவிட்டது என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

இது பற்றி பாஜக பொதுச் செயலர் ஜே.பி.நாதா கூறியதா வது.மக்களின் கவனத்தை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி செய் கிறது. நடத்தை விதி வரம்புக்குட் பட்டதாக மோடியின் செயல்பாடு உள்ளது.

பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கவே காங்கிரஸ் அதிர்ந்து போய் திசை திருப்ப பிரச்சினையாக்குகிறது. இவ் வாறு பாஜக பொதுச் செயலர் ஜே.பி.நாதா தெரிவித்தார்.

மீனாட்சி லேகி

காங்கிரஸ் புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. அரசமைப்பு சட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்தை நாங்கள் மதிக்கிறோம். அதன் முடிவுக்கு கட்டுப்படுவோம். நடத்தை விதிகளை மோடி மீறவில்லை. இது முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்ட நிருபர் கூட்டம் அல்ல. இவ்வாறு டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி தெரிவித்தார்.

மோடி பேச்சு

‘பிரதமர் போட்டியிலிருந்து என்னை ஓரம்கட்டுவதற்காக மூன்றாவது அணிக்கு ஆதரவு தரப்போவதாக சொல்லி தோல்வியை காங்கிரஸ் தானாகவே ஒப்புக்கொண் டுள்ளது. பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டனர்.

பதவிக்காக நான் போட்டி யிடவில்லை. நாட்டை காப் பாற்றவே போட்டியிடுகிறேன்’ என குஜராத் மாநிலம் காந்தி நகரில் வாக்களித்து விட்டு வெளியே வந்தபிறகு நிருபர்களிடம் பேசும்போது நரேந்திர மோடி. கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதி மீறல் என கருதுவதாக அறிவித்த தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சியின் புகாரின்பேரில் மோடி மீது புகார் பதிவு செய்ய உத்தரவிட்டது.

ஆம் ஆத்மி கண்டனம்

வாக்குப்பதிவு தினத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வேறொரு வாக்குப் பதிவு தினத்தில் சாலையோர பிரச்சாரக் கூட் டத்தை நடத்தியது. இப்போது கட்சி சின்னத்துடன் நிருபர் கூட்டம் நடத்தியுள்ளார் மோடி.

இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி கேட்டு மோடி வாக்களித்த பிறகு ட்விட்டரில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அசுதோஷ் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x