

மேற்கு வங்கத்தின், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம், கலைகுண்டா என்ற இடத்தில் இந்திய விமானப் படையின் விமான தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை சுமார் 11 மணியளவில் 2 விமானிகள் வழக்கமான பயிற்சிக்காக நவீன ஜெட் பயிற்சி விமானத்தில் புறப்பட்டனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான தள எல்லைக்குள் விழுந்து நொறுங்கியது.
முன்னதாக இதில் இருந்த 2 விமானிகள் பத்திரமாக வெளியே குதித்து உயிர் தப்பினர். விபத்து குறித்து விசாரணைக்கு விமானப் படை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு ஜெட் விமானம் கலைகுண்டா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது.
விமானப் படை போர் விமானிகளுக்கு 3-ம் நிலை பயிற்சியாக ஓராண்டுக்கு இந்த ஜெட் விமானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.