ஆந்திராவில் நிலநடுக்கம்

ஆந்திராவில் நிலநடுக்கம்
Updated on
1 min read

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 2.43 மணிக்கு லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அத்தங்கி, கொரினபாடு பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்பு கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடிவந்தனர்.

சுமார் 10 விநாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. எனினும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தால் வீட்டுக்குள் செல்லாமல் பொதுமக்கள் விடிய, விடிய தெருக்களிலேயே காத்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in