தேர்தலுக்குப் பின் உண்மை புரியும்: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் பதிலடி

தேர்தலுக்குப் பின் உண்மை புரியும்: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் பதிலடி
Updated on
1 min read

அமேதி மக்கள் ராகுல் காந்தியைத் தங்களின் விருப்பத்துக்குரிய தலைவராகப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் உண்மை நிலவரம் புரியும் என மத்திய இணையமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் ராஜீவ் சுக்லா இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிகளைப் பெற்றுள்ளார். அமேதி மக்கள், அவரைத் தங்களின் தலைவராகப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். பொதுத்தேர்தல் முடிவுகள் வரட்டும். அதன் பிறகு ஆம் ஆத்மியும் பிற கட்சிகளும் உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.

அமேதி தொகுதியில் ராகுல்காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இம்முறையும் வெற்றிபெறுவார், எனத் தெரிவித்தார் அவர்.

ஆம் ஆத்மியின் குமார் பிஸ்வாஸ், அமேதியில் ராகுல் போட்டியிடுவது தொடர்பாக விமர்சித்திருந்தார். அதற்குப் பதிலடியாகவே, ராஜீவ் சுக்லா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in