

நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகளில், சிபிஐ விசாரணை நடத்த வேண்டிய 6 முக்கிய விவகாரங்களை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளில் 6 முக்கிய விவகாரங்கள் குறித்து இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐ-க்கு கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி சி.பி.ஐ., விசாரிக்க வேண்டிய 6 முக்கிய விவகாரங்கள் என்ன என்பது இன்று பட்டியலிடப்பட்டுள்ளது.