நாட்டின் பிரதமரையே கொன்றவர்களை விடுவிப்பதா?- தமிழக அரசின் முடிவு பற்றி ராகுல் வேதனை

நாட்டின் பிரதமரையே கொன்றவர்களை விடுவிப்பதா?- தமிழக அரசின் முடிவு பற்றி ராகுல் வேதனை
Updated on
1 min read

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வேதனை தருவதாக அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எனினும், மரண தண்டனையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

ஜெகதீஷ்பூரில் உள்ள புராவ் கிராமத்தில் புதன்கிழமை உரையாற்றும்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:

மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர் எனது தந்தை.அவரது கொலைக்கு காரணமான குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று செய்தி கேட்டு நான் வேதனைப்படுகிறேன்.

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரு பிரதமருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இது எனது இதயத்திலிருந்து ஒலிக்கும் குரல்.

பிரதமரை யாரோ ஒருவர் கொல்கிறார். அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றால் ஒரு சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இதுபற்றி நன்கு சிந்திக்க வேண்டும். மரண தண்டனை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனது தந்தையை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை.

அதே வேளையில், இந்த விவகாரம் எனது தந்தை சம்பந்தப்பட்டது மட்டும் சார்ந்தது அல்ல. நாடு சார்ந்த விவகாரம் ஆகும் என்றார் ராகுல் காந்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in