

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணா சியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள சாரநாத் நகருக்கு சீன சுற்றுலாப் பயணிகள் 20-க்கும் மேற்பட்டோர் ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் துளசிப்பூர் என்ற இடத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் எதிர் திசையில் ஜீப்பில் வந்துகொண்டிருந்தனர். இவர்கள் துளசிப்பூர் தேவி பேட்டன் கோயிலில் வழிபாடு முடித்த பின் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பெல்கா என்ற இடத்தில் சாலை வளைவில் பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜீப்பில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலும் 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் இறந்தனர்.