வாட்ஸ் அப்பில் தலாக் கூறிய கணவர்: மனைவியின் புகாரால் போலீஸ் விசாரணை

வாட்ஸ் அப்பில் தலாக் கூறிய கணவர்: மனைவியின் புகாரால் போலீஸ் விசாரணை
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் தைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்ட தாரியான இஸ்லாமிய பெண்ணுக் கும், முதாசிர் அகமது கான் என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 20 நாட்களிலேயே அகமது கான் வேலை விஷயமாக துபாய் சென்றுவிட்டார்.

தனது தாய் வீட்டிலிருந்த அந்தப் பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணவன் வீட்டிற்குச் சென்றபோது, அவரை அவர்கள் வீட்டில் சேர்க்கவில்லை. “உனது கணவன் உன்னை விவாகரத்து செய்து விட்டான். அதனால் வீட்டிற்கு வராதே” எனக் கூறியுள்ளனர். மேலும், அந்தப் பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அகமது கான், 3 முறை “தலாக்” மெசேஜ் அனுப்பி, விவாகரத்து செய்து விட்டதாகத் கூறி தகவல் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, நேற்று முன் தினம் அவர் ஹைதராபாத் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“பெண்களின் வாழ்க்கையில் விளையாடுபவர்களைக் கைது செய்து, சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என அந்தப் பெண் கண்ணீர் மல்க கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in