கொல்கத்தா அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தவிப்பு: 20 நாளாகியும் இயல்புநிலை திரும்பவில்லை

கொல்கத்தா அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தவிப்பு: 20 நாளாகியும் இயல்புநிலை திரும்பவில்லை
Updated on
2 min read

மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து, 35 கிமீ தொலைவில் ஹவுரா மாவட்டத் துக்கு உட்பட்ட துலாகரில் பானர்ஜிபுரா மற்றும் முன்ஷிபுரா பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி மிலாது நபி ஊர்வலத்தின்போது கலவரம் வெடித்தது.

வன்முறை எதனால் ஏற்பட்டது என்பது குறித்து கேட்டால் போலீஸ் தரப்பில் வாய் திறக்க மறுக்கின்ற னர். ஆனால் பொதுமக்களில் இரு வேறு தரப்பில் வெவ்வேறான காரணங்கள் கூறப்படுகின்றன.

அப்பகுதியில் வசிக்கும் முகமது ருகுல் அமின் கூறும்போது, ஊர் வலத்தின் போது, லவுடு ஸ்பீக்கர் பயன்படுத்தினோம். அவ்வழியே கோயில் ஒன்று இருந்தது. அதனை நெருங்கும்போது, லவுடு ஸ்பீக்கரை நிறுத்திவிட்டோம். ஆனாலும் தொடர்ந்து ஊர்வலத்தை செல்லவிடாமல், மாற்று பாதையில் சுற்றிக்கொண்டு செல்லுமாறும் சிலர் கூறினர். ஏன் என்று விளக்கம் கேட்டபோது, எங்கள் மீது கற்களை வீசினர்’ என்று கூறினார்.

ஆனால், துர்கா மண்டல் என்பவர் கூறும்போது, ‘மாற்று மதத்தைச் சேர்ந்த வழிபாட்டு இடங்களின் வழியாக இருதரப்பு ஊர்வலங்களும் நடத்தக் கூடாது என்பது இப்பகுதியில் எழுதப்படாத விதியாக பின்பற்றப்பட்டு வந்தது. டிசம்பர் 13-ம் தேதி அந்த விதியை அவர்கள் மீறிவிட்டனர். இதுவே கலவரத்துக்கான காரணம்’ என்றார்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சிறிய அளவிலான சாதாரண உள்ளூர் பிரச்சினையை, சமூக வலைதளங்கள் மூலம், பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் ஊதிப் பெரிதாக்கி பெரிய மதக்கலவரம் நடந்தது போல பொய் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறிவருகிறார்.

இதன் காரணமாகவே, சம்பந்தப் பட்ட பகுதிக்குள் செல்ல அரசியல் கட்சிகளுக்கும், ஊடகத் துறை யினருக்கும் தடை விதிக்கப்பட் டிருந்தது. தற்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

இந்த கலவரத்தில் அப்பகுதி யில் உள்ள இருவேறு மதத்தவர் களின் வீடுகளும் தீயிட்டு கொளுத் தப்பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பி லான பொருட்கள் சூறையாடப்பட் டுள்ளன. வீடுகளையும், உடைமைக ளையும் இழந்த பலர் கோயில்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் பலர் உதவிக்காக உறவினர்களையும், நண்பர்களையும் தேடி அலைகின்றனர்.

முன்ஷிபுராவில் உள்ள பல தொழிலகங்கள் தீயில் எரிந்து சாம்பலானதால், அவையும் மூடிக் கிடக்கின்றன. பலர் வேலை இழந்துள்ளனர். சுய தொழில் செய்து வந்தவர்களும் தங்க ளின் உபகரணங்கள் தீயில் கருகி சாம்பலானதால், செய்வதறி யாது விழிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது.

தற்போது கலவரச் சூழல் அடங்கி, பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸார், சிறப்பு அதிரடிப்படை மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்றவை அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கலவரத்தை தடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

வன்முறையில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். கலவரத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக, மாநில அரசு சார்பில் ரூ.35 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடுமையான பாதிப்பு களை எதிர்கொண்ட மக்கள் இவற்றின்மூலம் இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in