

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, கடற்படைக்கு புதிய தலைமை தளபதியை நியமிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நடை பெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே இந்த நியமனத்துக்கு தேர்தல் ஆணையத்தின் அனு மதியைப் பெறுவது கட்டாயமாகும்.
முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு மும்பை கடல்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் இரு கடற்படை அதிகாரிகள் பலியாயினர். இந்த சம்பவத் துக்கு பொறுப்பேற்று கடற்படை தலைமை தளபதி டி.கே.ஜோஷி பதவி விலகினார்.
இப்போது கடற்படை துணை அட்மிரலாக உள்ள சோனி அடுத்த தலைமை தளபதியாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.