

தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் அகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மண்டேலா உண்மையான காந்தியவாதி என தெரிவித்துள்ளார். மேலும் அவரது இழப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கும் பெரும் இழப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் வாழ்வும், அவர் மேற்கொண்ட பணிகளும் இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் தருவதாக இருக்கும் என்றார்.
மண்டேலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இரங்கல் குறிப்பில், மண்டேலா மனித நேயத்தின் அடையாளமாக திகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் தம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.