

ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று (புதன்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ட்விட்டரில் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மயங்கி விழுந்த மக்களவை எம்.பி. இ.அகமது புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 78. அவருக்கு மனைவியும் 2 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கும் ஒருவர் பதவிக்காலத்திலேயே மறைந்திருப்பதால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என பல்வேறு குழப்பமான சூழ்நிலைகள் நிலவின.
இந்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று (புதன்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ட்விட்டரில் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.
அவர் தனது ட்விட்டரில், "இன்று காலை 11 மணியளவில் நான் மத்திய பட்ஜெட் 2017 தாக்கல் செய்வதை காணுங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.