Published : 01 Oct 2014 08:09 PM
Last Updated : 01 Oct 2014 08:09 PM

நேஷனல் ஹெரால்டு வழக்கு: தடை நவம்பர் வரை நீடிப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜர் ஆவதற்கான கால அவகாசத்தை டெல்லி உயர் நீதிமன்றம் நவம்பர் 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

தேசிய ஹெரால்டு பத்திரிக்கையின் வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை யங் இந்தியா என்ற நிறுவனம் வாங்கிய விவகாரத்தில் பலகோடி ரூபாய் சொத்துக்களை சோனியாவும் ராகுலும் அபகரித்துள்ளதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கின் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்படி சோனியா, ராகுல்காந்தி, காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் ஓரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே ஆகியோர் ஆகஸ்டு 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி விசாரணை கோர்ட்டு ஜூன் 26-ம் தேதி உத்தரவிட்டது.

இதனையடுத்து ஜூலை மாதம் 30-ந்தேதி 6 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை அக்டோபர் 1-ந்தேதிக்குள் முடித்து வைக்கவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் உத்தரவுப்படி விசாரணை கோர்ட்டில் சுப்பிரமணியசாமியின் வழக்கு மீதான விசாரணை நடந்தது. அப்போது, சோனியா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரமேஷ் குப்தா, தங்களுடைய வாதத்தை நிறைவு செய்ய இயலாமையைத் தெரிவித்தாக குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கின் மீது விசாரணையை அவ்வப்போது நடத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அப்போது பிட்ரோடாவுக்கு சம்மன் உத்தரவு அவரால் பெறப்படவில்லை என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிட்ரோடா வேண்டுமென்றே சம்மன் உத்தரவை பெறவில்லை என்று வழக்கை தொடர்ந்து சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட விசாரணை கோர்ட்டு நீதிபதி வி.வி.வைஷ் தான் பிறப்பித்த சம்மன் உத்தரவை அடுத்த மாதம் நவம்பர் 3-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x