

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்தை வசப்படுத்துகிறது.
டெல்லியை பாஜக கைப்பற்றவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புது டெல்லி தொகுதியில், முதல்வர் ஷீலா தீட்சித்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார்.
முதன்முதலாக தேர்தல் களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் சுமார் 25 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை உறுதிபடுத்தும் வகையிலேயே ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பு காட்டுகிறது.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதை தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. இளைஞர்கள் மத்தியிலும் வெகுவாகக் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.