

சுமார் 60 சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் (ஓ.பி.சி.) பட்டியலில் தேவையான திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், ஜாதியின் பெயர்களை திருத்தம் செய்வது, சேர்ப்பது, நீக்குவது என மொத்தம் 115 திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 13 மாநிலங்கள் மற்றும் 3 மத்திய ஆட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 60 சமூக மக்கள் பயன் பெறுவார்கள்.