

எதிர்வரும் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதை தடுத்து நிறுத்த தேசிய அளவில் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் கவனமாக ஆய்வு செய்ய வேண் டும். பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்த ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கை கோர்ப்பது குறித்து அக்கட்சி பரிசீலிக்க வேண்டும்.
குடியரசுத் தலைவருக்கான தேர்தலிலும், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சட்டப்பேரவைத் தேர்த லிலும், பாஜகவின் வியூகத்தை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.