ஐ.எஸ்.-ல் இணைந்த கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலி

ஐ.எஸ்.-ல் இணைந்த கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலி
Updated on
1 min read

ஐ.எஸ். இயக்கத்தில் இணைத்துக் கொண்ட கேரள இளைஞர் ஒருவர் அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருந்து 11 பேர் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தனர். இவர்களில் 4 பெண்கள் 3 குழந்தைகள் அடங்குவர். பெண்களில் இருவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், கேரளாவில் இருந்து சென்று ஐ,எஸ்.-ல் இணைந்த முர்ஷித் முகமது (23) என்பவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க வெடிகுண்டு தாக்குதலில் முர்ஷித் கொல்லப்பட்டுவிட்டதாக தங்களுக்கு வந்த வாட்ஸ் அப் தகவல் வந்திருப்பதாக முர்ஷித் முகமதுவின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னதாக, ஐ.எஸ்.-ல் இணைந்த டி.கே.ஹபீசுதீன் என்ற கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலியானதாக இதேபோல் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in