காகிதத்துக்கு விடை தருகிறது கேரள சட்டப்பேரவை

காகிதத்துக்கு விடை தருகிறது கேரள சட்டப்பேரவை
Updated on
1 min read

கேரள சட்டப்பேரவை காகித பயன் பாடு இல்லாமல் முழுவதும் மின்னணுமயமாக மாற்றப்பட உள்ளது.

இதுதொடர்பாக அந்த மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

பேரவையில் 140 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் அனை வரும் கேள்விகளைக் காகிதத்தில் அளிக்காமல் ஆன்லைனில் அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் சிலர் மட்டுமே ஆன்லைன் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். எனவே அனைவரும் ஆன்லைனுக்கு மாறும் வகையில் சிறப்பு பயிற்சி முகாமை நடத்த உள்ளோம்.

பேரவையில் ஒவ்வொரு உறுப்பினருக்கு முன்பாகவும் கணினி பொருத்தப்படும். அந்த கணினி மூலம் அவரவர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வளர்ச்சித் திட்டங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்தத் திட்டம் மூலம் கேரள சட்டப்பேரவை விரைவில் காகிதம் இல்லாமல் மின்னணுமயமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கே.எம்.மாணிக்கு அங்கீகாரம்

கேரளாவில் மது பார் ஊழல் விவகாரம் காரணமாக, மாநில முன்னாள் நிதியமைச்சர் கே.எம்.மாணி தலைமையிலான கேரள காங்கிரஸ்(எம்) கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியது. அக்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in