Published : 05 Jul 2016 11:00 AM
Last Updated : 05 Jul 2016 11:00 AM

புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகளை கருணை கொலை செய்ய அனுமதி கோரி ஆந்திர நீதிமன்றத்தில் பெற்றோர் கண்ணீர்

ஆந்திராவில், ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட தங்களது மகளை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.

மதனபல்லி ராமா ராவ் காலனி பகுதியில் வசிப்பவர் நாராயணா. இவரது மனைவி சுசீலா. இவர் களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். நாராயணா விவசாய கூலி வேலை செய்கிறார்.

இண்டர்மீடியட் (பிளஸ்-1) படித்து வரும் இவரது இளைய மகள் ரெட்டி மாதவி ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத், திருப்பதியில் உள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் புற்று நோயை பூரண மாக குணப்படுத்த முடியவில்லை.

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்றனர். அங்கு ரெட்டி மாதவிக்கு சிகிச்சை அளிக்க ரூ. 6 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவரால் இவ்வளவு செலவு செய்ய முடியவில்லை.

இதனால் மனம் உடைந்த பெற் றோர், மதனபல்லி நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்த னர். அதில், “புற்று நோயால் பாதிக் கப்பட்ட மகளைக் காப்பாற்ற முடிய வில்லை. அத்துடன் மகளின் வேதனையைப் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. எனவே, மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்ற கூறியிருந்தனர்.

இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி முன்பு ஆஜரான நாராயணாவும் அவரது மனைவியும் கதறி அழுதனர். ஆனால், அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதேபோல, கல்லீரல் பாதிக்கப் பட்ட 8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி, பெற்றோர் தரப்பில் மதனபல்லி அருகே உள்ள தம்பல பல்லி நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அந்தக் குழந்தையின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்தார். இப்போது குழந்தை ஞான சாய்க்கு சென்னை யில் உள்ள குளோபல் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடை பெற உள்ளது. இந்நிலையில், மாணவி ரெட்டி மாதவியின் மருத்துவ செலவையும் ஆந்திர அரசு ஏற்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.



ரத்தப் புற்றுநோயை குணப்படுத்த முடியும்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் விதுபாலா கூறியதாவது: புற்றுநோய்களிலேயே ரத்தப் புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு வரும் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்திவிடலாம். அதற்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெற வேண்டும். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் ரத்தப் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. இவ்வாறு டாக்டர் விதுபாலா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x