Last Updated : 19 Sep, 2016 10:15 AM

 

Published : 19 Sep 2016 10:15 AM
Last Updated : 19 Sep 2016 10:15 AM

காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி விலகியிருப்பது சரியல்ல: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா பேட்டி

காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி விலகியிருப்பது சரியல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.

இது தொடர்பாக அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த பேட்டி வருமாறு:

காவிரி பிரச்சினையின் உங்கள் நிலைப்பாடு என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு களை இருமாநிலங்களும் ஏற்றுக் கொண்டு அமல்படுத்த வேண்டும் என விரும்புகிறது. இந்த விஷயத் தில் இருமாநில நலன்களும் பாது காக்கப்பட வேண்டும். இதில் கர்நாடகா மட்டும் காவிரியை முழு உரிமை கோர முடியாது. நீர்வரத்து குறைந்தால் அதனால் ஏற்படும் பற்றாக்குறையை இரு மாநிலங் களும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

நடுவர் நீதிமன்றத் தீர்ப்பில் அறிவிக்கப்பட்ட இரு குழுக்களை மத்திய அரசு இன்னும் அமைக் காமல் உள்ளது. இந்தக் குழுக் களை ஏற்படுத்த எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தாமல் இருப்பது ஏன்?

இந்த குழுக்களை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். இதில் பிரச்சினை எழுகிறது எனில், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை அழைத்து பேச வேண்டும். கூட் டுறவு, கூட்டாட்சி என அடிக்கடி கூறும் மத்திய அரசு, பிரச்சினை என்று வரும்போது மட்டும் அமைதி காக்கிறது. கூட்டாட்சி எனக் கூறு வது வெறும் வார்த்தை ஜாலமாக இருந்தால் மட்டும் போதாது. இப் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமாக மத்திய அரசு தலையிட வேண்டும்.

வன்முறை ஏற்பட்ட பின்பு அமைதி காக்குமாறு மக்களிடம் பிரதமர் வேண்டுகிறார். ஆனால் அது உருவாகும் சூழல் இருப்பதை புரிந்து கொண்டு அதில் தலையிட் டிருக்க வேண்டும். ஜூன், ஜூலை யில் பெய்யும் மழை அளவைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பிரச்சினை இது. இதை நன்கு அறிந்த பின்பும் மோடி அரசு விலகியிருப்பது சரியல்ல. பிரச்சினையின் தீவிரத்தைப் புரியாத நிலையில் ஒன்றும் பிரதமர் அறிக்கை வெளியிட வில்லை. தனது ஆக்கப்பூர்வமான தலையீடு என்ன என்பதை பிரதமர் விளக்க வேண்டும். காவிரி பிரச்சினையைத் தீர்க்க பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 262-ன்படி மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 1956-ல் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் அமைக்கப்படும் நடுவர் மன்ற உத்தரவுகளில் உச்ச நீதி மன்றம் உட்பட யாருமே தலை யிட முடியாது என அதன் 11-வது விதியில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 1990 ல் அமைக் கப்பட்ட காவிரி நடுவர் நீதிமன்றம் 2007-ல் அளித்த இறுதி தீர்ப்பை எதிர்த்து இரு அரசுகளுமே வழக்கு தொடுத்தது சரியா?

இதற்கான சட்டம் தெளிவாக இருப்பினும் அது நடைமுறையில் நிறைவேற்றப்பட வேண்டும். இதை நிறைவேற்ற, சட்டத்தை மீறியதாக சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து சிறையில் தள்ளுவதற்கு அவர்கள் தனிநபர்கள் அல்ல. இது மாநில அரசுகள் சார்ந்த பிரச்சினை என்ப தால் அணுக முடியாமல் உள்ளது. காவிரி பிரச்சினையை சட்டநுணுக் கப் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. ஏனெனில், பிரச்சினைக் குரிய மாநிலங்கள் மற்றும் அதை சரிசெய்ய வேண்டிய மத்திய அரசு என அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை.

எனவே, இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆற்றில் இருவருக்கும் பங்கு இருப்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும் அதன் மக்களுக்கும் மத்திய அரசு புரிதலை ஏற்படுத்துவது ஒன்றுதான் வழியாகும்.

இவ்வாறு டி.ராஜா பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x