

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த சண்டை நேற்று 3-வது நாளாக நீடித்தது. இந்தச் சண்டை மாலையில் முடிந்தது. ஒரு தீவிர வாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊடுருவிய சில தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்த தீவிர வாதிகள் ஒரு கட்டிடத்துக்குள் புகுந்தனர். அந்தக் கட்டிடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குத லில் 4 தீவிரவாதிகள் ஏற் கெனவே கொல்லப்பட்டனர்.
மேலும் ஒரு தீவிரவாதி அங்குப் பதுங்கியிருந்தார். இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் ஒரு பகுதியை பாதுகாப்புப் படையினர் குண்டு வைத்து தகர்த்தனர். பின்னர் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அப்போது 2-வது தளத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.