

புதுச்சேரியில், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பொதுத் துறை நிறுவனங்கள், அரசு சார்புடைய நிறுவனம், வாரியம், கழகம், கூட்டுறவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ரூ.8 கோடியை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 9,500 ஊழியர்களுக்கு போனஸ், கருணைத் தொகை கிடைக்க உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.