சார்க் நாடுகளுக்கு இந்தியாவின் பரிசாக மே 5-ல் விண்ணில் பாய்கிறது தெற்காசிய செயற்கைகோள்: இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தகவல்

சார்க் நாடுகளுக்கு இந்தியாவின் பரிசாக மே 5-ல் விண்ணில் பாய்கிறது தெற்காசிய செயற்கைகோள்: இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தகவல்
Updated on
1 min read

பாகிஸ்தானை தவிர, பிற ஆசிய நாடுகள் பயன்பெறும் வகையில் வரும் மே 5-ம் தேதி ‘தெற்காசிய செயற்கைகோளை’ இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த தகவலை இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் உறுதி செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-09 ராக்கெட் மூலம் இந்த தொலைதொடர்பு செயற்கை கோள் (ஜிசாட்-9) விண்ணில் செலுத் தப்படும் என இஸ்ரோ வட்டாரங் களும் தெரிவித்துள்ளன. இந்த செயற்கைகோள் 2,195 கிலோ எடை கொண்டது. மொத்தம் 12 க்யூ-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களை சுமந்து செல்கிறது என இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள் ளார். மேலும் அவர் கூறியதாவது:

இந்த திட்டத்தில் பாகிஸ்தான் சேர்க்கப்படவில்லை. 12 ஆண்டுகள் வரை செயற்கைகோள் உயிர்ப் புடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2014-ல் காத்மாண்டுவில் நடந்த சார்க் உச்சி மாநாட்டின்போது, சார்க் உறுப்பு நாடுகளுக்கு உதவுவதற்காக இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், அண்டை நாடுகளுக்கு இது இந்தியாவின் பரிசு என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த செயற்கைகோள் வரும் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

முன்னதாக இந்த செயற்கை கோளுக்கு சார்க் என பெயரிடப் பட்டது. ஆனால் பாகிஸ்தான் இதில் சேர மறுப்பு தெரிவித்ததால், தெற்கு ஆசிய செயற்கைகோள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பேரிடர் தொடர்பான உதவிகள், தொலைதொடர்பு ஆகியவற்றுக் காகவே செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுவது வழக்கம். அதுபோலவே இந்த செயற்கைகோளும் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளை இணைக்கும் வகையில் செயல் படும். இதன் மூலம் உறுப்பு நாடு களுக்கு இடையே குறிப்பிடத்தகுந்த தொலைதொடர்பு சேவைகள் பயன் பாட்டுக்கு வரும். உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக 36 முதல் 54 மெகாஹெர்ட்ஸ் வரை டிரான்ஸ்பாண்டர்கள் திறனை சொந்த தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in