

தீவிரவாத தாக்குதல் அல்லது இடதுசாரி தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றில் பலியாகும் பொதுமக்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றிருந்த பிரதமர் மோடியிடம், எல்லையில் நடைபெறும் சண்டை யில் பலியாவோரின் குடும்பத் தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
கடந்த 2008-ம் ஆண்டு முதல் தீவிரவாதம், இன மோதல், இடதுசாரி தீவிரவாதம் ஆகிய வற்றில் பலியாகும் பொதுமக்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் இழப்பீடு ரூ.3 லட்சத்தி லிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது.
அத்துடன் காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் தாக்குதலில் பலியாவோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை யில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட் டுள்ள இந்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.