Last Updated : 24 Jun, 2016 07:39 AM

 

Published : 24 Jun 2016 07:39 AM
Last Updated : 24 Jun 2016 07:39 AM

ராமரை விமர்சித்த வழக்கில் மைசூரு பேராசிரியர் கைது: சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் மகேஷ் சந்திர குரு.

இவர் கடந்த 2015, ஜனவரி 3-ம் தேதி மைசூரு பல்கலைக் கழகத்தில் நடந்த பயிற்சி பட்டறை யில் பேசும்போது, “'ராமாயணத் தின் முக்கிய கதாபாத்திரமான ராமன் மனித உரிமை மீறல் களில் ஈடுபட்டுள்ளார்.

கடவுளாக வணங்கப்படும் அவரே சீதையின் நடத்தை மீது சந்தேகம் கொண்டார். சீதையை குற்றவாளிபோல‌ நடத்தினார். ஆனால் ஊடகங்கள் ராமரை கடவுளாக மாற்றிவிட்டன” என்று கூறியதாக தெரிகிறது.

இது தொடர்பாக கர்நாடக சர்வோதய சேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் மகேஷ் சந்திர குருவுக்கு எதிராக ஜெயலக்ஷ்மி புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சந்திர குரு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மைசூரு முன்சீப் நீதிமன்றத்தில் நேற்று விசா ரணைக்கு வந்தது. பேராசிரியர் மகேஷ் சந்திர குருவை வரும் ஜூலை 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மைசூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு சமூக, மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். முதல்வர் சித்தராமையா தலையிட்டு, இந்த பொய் வழக்கை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளன‌ர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x