

அசாமில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமின் பிஸ்வநாத், ஜோர்கத், லக்கிம்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரண மாக அங்குள்ள 28 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அதேபோல், மலைப்பகுதிகள் நிறைந்த திமாஹசோ-வில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பராக் பள்ளத்தாக்கு பகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை சில்சாருக்கும் லும்டிங்-க்கும் செல் லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப் பட்டது. மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் வெள்ள மீட்புப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.-