Published : 11 Jun 2016 10:15 AM
Last Updated : 11 Jun 2016 10:15 AM

சொத்து குவிப்பு வழக்கில் 2-வது நாளாக இமாச்சல முதல்வரிடம் சிபிஐ விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 2-வது நாளாக நேற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது (2009 முதல் 2012 வரை) காங்கிரஸ் மூத்த தலைவரான வீரபத்ர சிங், மத்திய அமைச்சராக பதவி வகித் தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.03 கோடி அளவில் அவர் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக வீரபத்ர சிங்கிடம் நேற்று முன் தினம் 7 மணி நேரம் வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்றும் விசா ரணைக்காக அவர் டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவருக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து சிபிஐ உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு எதிராக இவ்வழக்கில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதற்கு கூட் டாளிகளுடன் இணைந்து அவர் செய்த கிரிமினல் சதித் திட்டங் களையும் கண்டுபிடித்துள்ளோம்’’ என்றார்.

வீரபத்ர சிங் கணக்கில் வராத வருமானத்தை தனது பெயரிலும், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர் கள் பெயர்களிலும் எல்ஐசி பாலிசி யில் முதலீடு செய்திருப்பதாக கூறப் படுகிறது. இந்த பணத்துக்கு ஆதார மாக தனது விவசாய வருமானத்தை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங், எல்ஐசி முகவர் ஆனந்த் சவுஹான் மற்றும் சுன்னி லால் சவுஹான் ஆகியோர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x