Last Updated : 08 Sep, 2016 01:13 PM

 

Published : 08 Sep 2016 01:13 PM
Last Updated : 08 Sep 2016 01:13 PM

40% ஆள் கடத்தல் சம்பவங்கள் அசாம், மே.வங்கத்தில் நடக்கிறது: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

நாட்டில் 40% ஆள் கடத்தல் சம்பவங்கள் அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆள் கடத்தல் சம்பவங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

3 கோடி மக்கள் தொகை கொண்ட அசாம் மாநிலத்தில் ஆள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 2015-ல் மட்டும் 1494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அசாமின் மக்கள் தொகையில் மூன்று மடங்கு அதிகம் மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஆள கடத்தல் தொடர்பாக 1255 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் 2015 ஆம் ஆண்டு பதியப்பட்ட குற்றச் சம்பவங்களில் 21.7% ஆள் கடத்தல்கள் தொடர்பானவை. இந்தியா முழுவதும் ஆள் கடத்தல்கள் குறைந்தபட்சம் 6,877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அசாம், மேற்கு வங்கத்துக்கு அடுத்தப்படியாக உள்ள இந்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாட்டில் 2015-ல் மட்டும் ஆள் கடத்தல் தொடர்பாக 577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக இந்திய சட்டப்பிரிவு 366-A யின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் 18 வயது குறைவான பெண்கள் கடத்தல் சம்பந்தப்பட்டவை.

இந்தியா முழுவதும் ஆள் கடத்தகள் தொடர்பாக ஐபிசி 366-யின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 3,087.

மசோதா தயார்

ஆள் கடத்தல் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக போராடி வரும் சக்தி வாஹினி தொண்டு நிறுவன செயற்பாட்டாளார் ரிஷி கண்ட் கூறும்போது, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆள்கடத்தல் குற்றத்தை திட்டமிட்ட/அமைப்புசார் குற்றமாகக் கருதும் மசோதாவைக் கொண்டு வரவுள்ள நிலையில், இந்தப் புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆள்கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா 2016 தயாராக உள்ளது. மசோதா தொடர்பான ஆலோசனைகளை பல்வேறு மாநிலங்கள், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

“அசாமில் அண்மைக்காலமாக அடிக்கடி ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கு, ஆள் கடத்தலில் முக்கியக் காரணியாக உள்ளது. அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆள் கடத்தல் தொடர்பாக போலீஸார் பதிந்துள்ள வழக்குகள், இக்குற்றங்களைத் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை” எனவும் ரிஷிகண்ட் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x