

கோவாவில் கடற்கரைகள், திறந்தவெளிகள், நெடுஞ்சாலைகள் என பொது இடங்களில் மது அருந்தப்படுவதாகவும் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் இச்செயலில் ஈடுபடுவதாகவும் அரசுக்கு புகார்கள் வருகின்றன.
இந்நிலையில் கோவா ஆயத் தீர்வை சட்டத் திருத்த மசோதாவை சட்டப் பேரவையில் அம்மாநில அரசு நேற்று அறிமுகம் செய்தது. இதில் கோவா முழுவதும் மது அருந்த தடை விதிப்பதற்கான பகுதி களை அடையாளம் காண பரிந் துரைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் மது அருந்துவோருக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கவும் அதில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
“பொது இடங்களில் மது பாட்டில்கள், கேன்கள் வீசப்படுவ தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படு கிறது. இது அப்பகுதி வழியே செல்லும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் பொது இடங்களில் மது அருந்துவோர் போதையில் பொதுமக்களுக்குத் தொந்தரவு தருவதும் அதனால் அப்பகுதியில் அமைதி கெடுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதும் தொடர்கிறது” என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
கோவாவில் குறைந்த விலை மது மற்றும் கேளிக்கை விடுதி கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்கு காரணமாக உள்ளது.