

ஹைதராபாத்தில் கடன் தொல்லை காரணமாக தங்களது இரட்டை குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெற்றோர் தற்கொலை செய்துகொண்டனர்.
ஹைதராபாத் சீதாராம் பாக் பகுதியை சேர்ந்தவர் ராஜு (32). இவரது மனைவி ராதிகா (28). இவர் களுக்கு மேகா (2), மேக்னா (2) ஆகிய இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். பழைய இரும்பு கடை வைத்திருந்த ராஜு, சமீப காலமாக கடன் தொல்லையால் மிகவும் அவ திப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ராஜு தம்பதி தங்களது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, பின்னர் இரு வரும் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். காவல் துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.