பெங்களூரு காங்கிரஸில் குழப்பம்: எம்எல்ஏவை கண்டித்து பெண் கவுன்சிலர் ராஜினாமா

பெங்களூரு காங்கிரஸில் குழப்பம்: எம்எல்ஏவை கண்டித்து பெண் கவுன்சிலர் ராஜினாமா
Updated on
1 min read

பெங்களூரு மாநகராட்சி காங்கிரஸ் பெண் கவுன்சிலர், தனது கட் சியை;D சேர்ந்த எம்எல்ஏ மீது குற்றச் சாட்டுகளைக் கூறி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெங்களூரு மாநகராட்சி எச்.எம்.டி. வார்டு கவுன்சிலராக காங் கிரஸை சேர்ந்த ஆஷா சுரேஷ் உள்ளார். இந்த வார்டு ராஜராஜேஸ்வரி நகர் சட்டபேரவை தொகுதியின் கீழ் வருவ‌தால், எம்எல்ஏ முனிரத்னா (காங்கிரஸ்) கவுன்சிலரின் பணிகளில் தலை யிட்டுள்ளார். இதனால் முனி ரத்னாவுக்கும், ஆஷாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆஷா சுரேஷ், தனது வார்டில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள எம்எல்ஏ முனிரத்னா தடையாக இருப்பதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்களிடம் முறையிட்டார்.

இந்நிலையில் ஆஷா சுரேஷ் நேற்று முன் தினம் மாலையில் பெங்களூரு மாநகராட்சி மேயர் மஞ்சுநாத் ரெட்டியை சந்தித்து, '' எம்எல்ஏ முனிரத்னா எனது வார்டு வளர்ச்சி பணிகளை செய்ய விடாமல் தடுக்கிறார். அவரை மீறி ஏதேனும் செய்தால், பொது இடத்திலே மிரட்டுகிறார். எனவே எனது கவுன்சிலர் பதவியை ராஜி னாமா செய்கிறேன்''என கூறி ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

முனிரத்னா எம்எல்ஏ, கவுன்சிலர் ஆஷா சுரேஷ், மேயர் மஞ்சுநாத் ரெட்டி ஆகிய மூவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் சமாதான பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கியது. ஆனால் ஆஷா சுரேஷ் சமரச‌த்தை ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து, மேயர் மஞ்சுநாத் ரெட்டி காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரிடம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in