

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரேபரேலி மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுவை ஏப்ரல் 2-ம் தேதி தாக்கல் செய்கிறார்.
இத்தகவலை ரேபரேலியில் உள்ள சோனியாவின் பிரதிநிதி கிஷோர் லால் சர்மா வெள்ளிக் கிழமை தெரிவித்தார். சர்மா மேலும் கூறுகையில், “இந்தத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களின் அடிப் படையில் தன்னை மீண்டும் தேர்வு செய்யுமாறு சோனியா கேட்டுக்கொள்வார். கடந்த 10 ஆண்டுகளில் இப்பகுதியின் முன்னேற்றத்துக்காக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட் டுள்ளன” என்றார்.