

கர்நாடகத்தில் 600 காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர். திடீரென காவல்துறை அதிகாரிகள் இத்தனைபேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கர்நாடக காங்கிரஸில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் மே 8-ஆம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்படாமல் இருந்த னர்.
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் கர்நாடக காவல்துறையை சேர்ந்த 600 அதிகாரிகள் வியாழக்கிழமை இடம் மாற்றம் செய்யப்பட்டனர். 136 டி.எஸ்.பி.க்களும்,117 எ.டி.எஸ்.பி.க் களும்,347 இன்ஸ்பெக்டர்களும் இந்த திடீர் இடமாற்றத்தினால் தூக்கியடிக்கப் பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் திடீர் பணியிட மாற்றத்தால் கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இத னால் வெள்ளிக்கிழமை கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜி. பரமேஷ்வரை சந்தித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் ஒருங்கி ணைப்பு குழுவை கூட்டாமல் முடிவெடுத்து இருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து முதல மைச்சர் சித்தராமை யாவையும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜையும் முதலமைச்சரின் 'கிருஷ்ணா' இல்லத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஷ்வர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காவல் துறையினரின் இட மாற்றம் குறித்து தன்னிடம் கருத்துகளை தெரிவிக்காமல் மாநில தலைவரிடம் காங்கி ரஸ் எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும்குறைகளை தெரிவித்திருப்பது கண்டிக் கத்தக்கது.
தனது முடிவில் எவ்வித மாற்றமும் செய்ய போவதில்லை என முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் காவல்துறை அதிகாரிகளின் திடீர் இடமாற்றம் கர்நாடக மாநில காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை.
136 டி.எஸ்.பி.க்கள், 117 எ.டி.எஸ்.பி.க்கள், 347 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600 அதிகாரிகள் தூக்கியடிக்கப் பட்டுள்ளனர்.