22 மாநிலங்களில் பயிர்க்காப்பீடு திட்டம் அமல்

22 மாநிலங்களில் பயிர்க்காப்பீடு திட்டம் அமல்
Updated on
1 min read

மாநிலங்களவை கேள்விநேரத்தில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் நேற்று கூறியதாவது:

22 மாநிலங்கள் பிரதமரின் புதிய பயிர்க் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. கூடுதல் விவசாயிகள் பயனடைவதற்காக காரீப் பருவ பயிர்காப்பீட்டு திட்டத்துக்கான அவ காசத்தை அரசு 10-ம் தேதி வரை நீட்டித் துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு கூடுதல் காப்பீடுகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்திலிருந்து பிஹார் மாநிலம் விலகிவிட்டது. பஞ்சாப் மாநிலம் இத்திட்டத்தை அறிமுகம் செய்யாததால் அம்மாநிலத்துக்கு இத்திட்டம் பொருந்தாது. ராபி பருவத்துக்கு காப்பீட்டுத் தொகை 1.5 சதவீதமாகவும், காரீப் பருவத்துக்கு 5 சதவீதமாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. வரலாற்றிலேயே இதுதான் மிகவும் குறைவு.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in