இந்தியாவில் சராசரியாக 10 லட்சம் பேருக்கு 18 நீதிபதிகள்: மத்திய சட்ட அமைச்சகம் தகவல்

இந்தியாவில் சராசரியாக 10 லட்சம் பேருக்கு 18 நீதிபதிகள்: மத்திய சட்ட அமைச்சகம் தகவல்
Updated on
1 min read

நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதத்தில் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என, 1987-ம் ஆண்டில் சட்டக் கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால், தற்போது மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 10 லட்சம் பேருக்கு, 18 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

நாட்டின் மக்கள்தொகை மற்றும் நீதிபதிகள் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் குறித்து, மத்திய சட்ட அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு, 17.86 நீதிபதிகள் என்ற விகிதத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை உள்ளது. இதே மக்கள்தொகை விகிதத்தின் படி கணக்கிட்டால், மிசோரம் மாநிலத்தில் தான் அதிகபட்சமாக, 57.74 என்ற அளவில் நீதிபதிகள் உள்ளனர்.

நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் மிகக் குறை வாக 10.54 என்ற விகிதத்திலேயே நீதிபதிகளின் எண்ணிக்கை உள்ளது. நாட்டிலேயே மிகக் குறைவாக, 10.45 என்ற அளவில், குறைந்த எண்ணிக்கையில் நீதிபதி களைக் கொண்டு இயங்கும் மாநில மாக மேற்குவங்கம் உள்ளது.

உச்ச நீதிமன்றத்துக்கு அண்மை யில் புதிதாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும், மேலும் 3 நீதிபதிகளுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in