

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்டு மக்கள் முன் நிறுத்த மோடி, ராகுல் காந்தியை விட ஒரு நல்ல வேட்பாளர் தேவைப்படுகிறார் என ஆம் ஆத்மி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்படுவாரா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த யோகேந்திர யாதவ், "மோடி, ராகுல் காந்தி ஆகிய இருவரை விட ஒரு சிறந்த வேட்பாளரை நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி விரும்புகிறது" என்றார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முதல் வேட்பாளர் பட்டியல் இன்னும் 10 முதல் 15 நாட்களில் வெளியிடப்படும் என ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.