மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17-ல் தொடக்கம்

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17-ல் தொடக்கம்
Updated on
1 min read

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்குகிறது.

நாடாளுமன்ற விவகாரங்களுக் கான மத்திய அமைச்சரவை கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ஜூலை 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடரை நடத்திட இந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாக முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுவாக ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே கூட்டத்தொடரை தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் ஜூலை 17-ம் தேதியே மழைக்கால கூட்டத்தொடரும் தொடங்கும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மக்களவை உறுப்பினர் வினோத் கன்னா, மாநிலங்களவை உறுப்பினர் பல்லவி ரெட்டி ஆகியோரின் மறைவுக்கு முதல் நாளில் அஞ்சலி செலுத்தப்பட்டு இருஅவைகளும் ஒத்திவைக்கப்படும். இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in