

தற்கொலை செய்து கொள்ளு மளவுக்கு தைரியமற்றவர் அல்ல எனது தாயார் என்று சுனந்தா புஷ்கரின் மகன் சிவ் மேனன் தெரிவித்துள்ளார்.
தனது தாயாரின் மரணம் குறித்து வெளியாகும் பல்வேறு ஊகங்களை நிராகரித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:
பல்வேறு மாத்திரைகளை தவறாக கலந்து உட்கொண்டது, பத்திரிகைகளில் வெளியான செய்திகளால் ஏற்பட்ட பதற்றம், மன அழுத்தம் போன்றவைதான் எனது தாயார் மரணத்துக்கு காரணமாக அமைந்து விட்டன.
எப்போதாவது கருத்து வேறு பாடு ஏற்பட்டாலும் சசிதரூரும் எனது தாயாரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்தனர். மத்திய அமைச்ச ரான சசிதரூர் அடித்துத் துன்புறுத்து பவர் அல்ல. எனது தாயாரின் மரணம் பற்றி பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மை யானவை அல்ல. அந்த செய்திகள் அதிர்ச்சி தருபவையாகவே இருக்கின்றன. எனது தாயாரை தெரிந்தவர்கள் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்பதை அறிவார்கள்.
உடல்ரீதியில் துன்புறுத்தக் கூடியவர் சசிதரூர் என நான் நம்பவேயில்லை. அப்படியிருக் கையில் அவர்தான் சுனந்தா உயிர்போனதற்கு காரணம் என்று வெளியாகும் செய்திக்கு அர்த்தமே இல்லை. எனது தாயார் தூக்கத்திலேயே நிம்மதியாக போய்ச் சேர்ந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார் சிவ் மேனன். முந்தைய திருமண வாழ்வில் சுனந்தாவுக்கு பிறந்தவர் மேனன்.
தெற்கு டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு உயிரி ழந்து கிடந்தார் சுனந்தா. இந்த வழக்கை விசாரிக்கும் துணை கோட்ட ஆட்சியர் அலோக் சர்மா, விஷம் காரணமாகவே சுனந்தா உயிரிழந்ததாக பிரேத பரிசோ தனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதை அடுத்து, அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டிருப்பாரா என தீர விசாரிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
சுனந்தாவின் சகோதரர், மகன், தரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்கு மூலங் களைப் பதிவு செய்த துணை கோட் டாட்சியர் அலோக் சர்மா, குடும்பத் தார் யாரும் சுனந்தாவின் மரணம் கொலையாக இருக்கும் என சந்தே கம் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.