ஆன்மிக கண்காட்சிக்கு எதிர்ப்பு: கனிமொழி, டி.ராஜா புகார்

ஆன்மிக கண்காட்சிக்கு எதிர்ப்பு: கனிமொழி, டி.ராஜா புகார்
Updated on
1 min read

சென்னை ஏ.கே.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையி்ல் திமுக உறுப்பினர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் இந்த இந்த விவகாரத்தை எழுப்பி புகார் தெரிவித்தனர்.

இது குறித்து மாநிலங்களவை யில் திமுக குழுத் தலைவரான கனிமொழி பேசும்போது, “ஆசிரியர்கள் மீது நாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த அவர்கள் உழைக் கின்றனர். ஆனால் சென்னையில் இந்து மத அமைப்புகள் நடத்தும் ஒரு கண்காட்சியில் 1800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அந்நிகழ்ச்சியின் தொகுப்பைப் பார்க்குமாறு பள்ளிக் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பூஜைகள் செய்யுமாறு வற்புறுத்தப் படுகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே இது” என்றார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பேச அனுமதி மறுத்த அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், “இது குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளித்தால், அதற்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறி அமர வைத்தார்.

அடுத்து பேசிய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், இந்த நிகழ்ச்சியை இந்து மதவாத நிறுவனங்கள் நடத்து வதாகவும்,. இந்தப் பிரச்சினையை கவனத்தில் கொண்டு அவையில் விவாதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in