

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பின் பெண் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீ ஸார் நேற்று தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப் பில் ஏரியா கமாண்டராக இருந்தவர் கவுசல்யா குமாரி என்கிற சபீதா. இவரைப் பற்றிய தகவலுக்கு போலீ ஸார் ரூ.2 லட்சம் வெகுமதி அறி வித்திருந்தனர். இந்நிலையில் செரைகெலா-கர்சவான் மாவட்டத்தின் தன்சியா என்ற கிராமத்தில் சபீதா பதுங்கி யிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த ஞாயிற் றுக்கிழமை இரவு அக்கிராமத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி சபீதாவை கைது செய்தனர்.
பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் சபீதாவுக்கு தொடர்பு உள்ளதாக போலீ ஸார் தெரிவித்தனர்.