

காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அனைத்து தரப்பினர் பங்கேற்கும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து, அரசியல் தீர்வுக்கு வழிவகை செய்ய வலியுறுத்தி காஷ்மீர் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கவுள்ளனர்.
காஷ்மீரில் பிரச்சினை ஓயாத நிலையில், ஒமர் அப்துல்லா தலைமை யிலான எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவர் பிரணாப் தலையிட வேண்டும் என நேற்று முன்தினம் வலியுறுத்தி னர். அரசியல் தீர்வு காணவும் வேண்டுகோள் விடுத்தனர்.