

நாடு முழுவதும் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித் துள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் கவலையை வெளிப்படுத்தி உள்ளது. இச்சம்பவங்கள் குறித்து பிஹார், சத்தீஸ்கர் மாநில தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி-க்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குழந் தைகள் கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளதை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது. இம்மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, மதன் லோக்கூர், ஏ.கே.சிக்ரி ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
குழந்தைகள் கடத்தல் குறித்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பின்பும் இச்சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதற்கு வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், ‘இப்பிரச்சினையை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அனைத்து மாநிலங் களிலும் இச்சம்பவத்தை முழுமை யாக தடுக்க வழிமுறைகள் ஏற்படுத்த வேண்டும்’ என்றனர்.
குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ள பிஹார், சத்தீஸ்கர் மாநிலங்களில் விவரங்களை சமர்ப்பிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாததால், அந்த இரு மாநில தலைமைச் செயலர்கள், டிஜிபி-க்கள் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
குழந்தைகள் கடத்தலை தடுக்க ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நடைமுறையை பின்பற்றி வருவதாக வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டினர்.
அதில் சிறந்த வழிமுறை எது என்று கண்டறிந்து அதை அனைத்து மாநிலங்களும் பின் பற்ற உத்தரவிடலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், குழந்தைகள் கடத்தலை தடுப்பது குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் டிஜிபி-க்களை அழைக் கப் போவதாக தெரிவித்த நீதிபதிகள், முதல்கட்டமாக பிஹார், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு விதி முறைகள் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தனர்.