Last Updated : 27 Jan, 2017 03:17 PM

 

Published : 27 Jan 2017 03:17 PM
Last Updated : 27 Jan 2017 03:17 PM

விவசாயிகள் தற்கொலை உணர்வுபூர்வமான விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதும் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஒன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு, "நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் நடந்ததாக கூறப்படும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் உணர்வுபூர்வமான பிரச்சினை. இப்பிரச்சினையில், மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியன 4 வாரங்களுக்குள் உரிய விளக்கமளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தது.

பொய்த்துப்போன பருவமழை, வறட்சி, வெள்ளம், புயல் என நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காரணங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x