

ரியோ ஒலிம்பிக் தனிநபர் பாட்மிண் டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி சிந்து நேற்று திருமலை யில் ஏழுமலையானை தரிசித்து எடைக்கு எடை வெல்லம் கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
பி.வி சிந்து, அவரது குடும்பத்தினர், பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் நேற்று திருமலை சென்றனர். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனர்.
முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள துலாபாரத்தில் தனது எடைக்கு எடையாக 68 கிலோ எடை யில் வெல்லத்தை சிந்து நேர்த்திக் கடனாக செலுத்தினார். பின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: ரியோ ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றால் எடைக்கு எடை நேர்த்திக் கடன் செலுத்துவதாக ஏழுமலையானை வேண்டி கொண்டேன் அதன்படி திருமலைக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினேன். தொடர்ந்து பல பதக்கங்கள் வெல்லவும் ஏழுமலை யானை வேண்டி கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்
பயிற்சியாளர் கோபி சந்த், தனது மாணவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தினார்.