

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தண்டனை விபரங்கள் நாளை மறுநாள் ( அக்டோபர் 3ம் தேதி) அறிவிக்கப்படுகிறது. தண்டனை விபரங்களை லாலு சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் முலம் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சிறையில் (z)இசட் பிரிவு பாதுகாப்பு கேட்ட லாலுவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.