

அரசு ஒப்பந்தங்களை அளித்த தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் முதன்மைச் செயலாளர் மற்றும் 6 பேருக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார், கேஜ்ரிவால் அலுவலக துணைச் செயலாளர் தருண் சர்மா, ராஜேந்திர குமாரின் நெருக்கமான உதவியாளர் அசோக் குமார், தனியார் நிறுவன உரிமையாளர்கள் சந்தீப் குமார், தினேஷ் குமார் குப்தா ஆகியோர் இவ்வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்கள் அனை வரும் நேற்று ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
பொதுத்துறை அமைப்பின் முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாக இயக்குநர்கள் கவுசிக், நந்தா ஆகியோருக்கும் நீதிமன்றக் காவல் விதித்து, பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுனாலி குப்தா உத்தரவிட்டார்.
இவர்கள் ஏழு பேரும் சிபிஐ நீதிமன்றத்தின் முன் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
ஏற்கெனவே ராஜேந்திர குமார் உள்ளிட்ட 5 பேர் சிபிஐ காவலில் 5 நாள் விசாரிக்க உத்தரவிடப் பட்டிருந்தது. மேற்கண்ட 7 பேரை யும் சிபிஐ காவலில் விசாரிக்கக் கோரும் மனு குறித்து சிபிஐ நீதிமன்றம் இன்று பரிசீலிக்க உள்ளது.