

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது ஜனாதிபதி நடவடிக்கை கோருவது தொடர்பாக சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
பயிற்சி வழக்குரைஞருக்கு பாலியல் புகார் கொடுத்ததாக நீதிபதி ஏ.கே.கங்குலி மீது எழுந்த புகாரை அடுத்து அவர் வகித்து வரும் மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் கமிஷன் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் இளம்பெண் ஒருவரை பின் தொடர்ந்து அவரைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு விரைவில் உத்தரவிடப்படும் என்றும் ஷிண்டே தெரிவித்தார்.