Last Updated : 08 Jul, 2016 04:33 PM

 

Published : 08 Jul 2016 04:33 PM
Last Updated : 08 Jul 2016 04:33 PM

ஆசிரியரை அனுப்பாதீர்: கர்நாடகாவில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் சாலை மறியல்

கர்நாடகாவில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தக் கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் கெம்பேகவுடாவில் தோடி கிரமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று இருக்கிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்.

இப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் அனசுயம்மா. இவர் மாணவர்கள் மீது மிகுந்த அன்பு பாராட்டியிருக்கிறார். இந்நிலையில் திடீரென அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தங்களுக்கு பிரியமான ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், ஆசிரியை அனுசுயாவை மீண்டும் தங்களது பள்ளியிலேயே பணிக்கு அமர்த்த வேண்டியும் அந்த பிஞ்சுக் குழந்தைகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

"எங்கள் ஆசிரியர் எங்களுக்கு திரும்ப வேண்டும்.. எங்களுக்கு நீதி வேண்டும்" என போராட்டத்தில் பங்கேற்ற சின்னஞ்சிறு மாணவர்கள் கோஷமிட்டனர்.

மாணவர்களின் திடீர் போராட்டத்தால் ராமநகரம் மெகந்தி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மாணவர்களின் போரட்டத்தை கேள்விப்பட்டு சுற்றுவட்டாரத்தினரும் சாலை மறியிலில் பங்கேற்றனர். சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த கல்விதுறை அதிகாரி குமரசாமிக்கு எதிராக பொதுமக்கள் கோஷமிட்டனர்.

பின்னர் மதியம் 12.20 மணியளவில் அதிகாரிகள் தங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியதால் மாணவர்கள் தங்களது போரட்டத்தை திரும்ப பெற்றனர்.