

48 நாள் வருடாந்திர அமர்நாத் யாத்திரை நேற்று பாரம்பரிய பூஜையுடன் முடிவடைந்தது.
தெற்கு காஷ்மீரின், அனந்தநாக் மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்த 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் புனித யாத்திரை செல்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 2-ம் தேதி தொடங்கி, பாரம்பரிய பூஜையுடன் நேற்று முடிவடைந்தது.
இந்த ஆண்டு சுமார் 2,21,000 பேர் புனித யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும்.