

திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் நேற்று கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 9 நாட்களுக்கு விழா நடைபெறுகிறது.
கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை சீதா சமேத கோதண்ட ராமர், லட்சுமணர் உற்சவ மூர்த்திகளின் வீதி யுலா நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடிமரத்தில், வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசையுடன் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
இரவு பெரிய சேஷ வாகனத்தில் சிறப்பாக நடந்த உற்சவ மூர்த்திகளின் வீதியுலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 29-ம் தேதியும், மறுநாள் காலை ஹனுமந்த வாகன சேவையும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.